பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
159
 
17

நனிபள்ளி நற்றுணை நாயகர்

சோழப் பேரரசர்களில் மிக்க பெருமை யுடையவன் ராஜராஜன். அவனையும் விடப் புகழ்படைத்தவன் அவன் மகன் ராஜேந்திரன். இவன் கி.பி. 1014 முதல் 1044 வரை அகண்ட தமிழகத்தை ஆட்சி புரிந்திருக்கிறான். தந்தை இட்ட பெயர் மதுராந்தகன் என்றால், முடி சூடியபோது ராஜேந்திரன் என்று அபிஷேகப் பெயர் சூடிக்கொள்கிறான். இவனும் தந்தையைப் போலவே பிறநாடுகளின் பேரில் படை கொண்டு சென்று அந்தந்த அரசர்களை வெற்றி கண்டு தமிழகத்தை மிகவும் விரிவுடையதாக ஆக்கியிருக்கிறான்.

இவன் ஆட்சியின் கீழிருந்த சோழ சாம்ராஜ்யம் இன்றையச் சென்னை ராஜ்யத்தையும், மைசூரில் ஒரு பகுதியையும், ஈழ நாட்டையும் கொண்ட பெரிய ராஜ்யமாக இருந்திருக்கிறது. இவனுடைய ஆசை எல்லாம் வங்காளம் முதலிய வடநாடுகளையும் வென்று கங்கையையும் காவிரியையும் இணைத்து விடுவது என்பதுதான். அதனால் வடக்கு நோக்கிப் படையெடுத்து அங்குள்ள அரசர்களை வென்று மகிபாலன் என்பவனது தலையில் கங்கை நீர் நிரப்பிய குடம் ஒன்றை ஏற்றித் தன் தலைநகருக்கே கொண்டு வந்திருக்கிறான். இப்படிக் கங்கையைக் கொண்டுவந்த பேரரசனைக் கங்கை கொண்டான் என்றே