பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

வேங்கடம் முதல் குமரி வரை

மாயூரம் நடராஜர்

இருக்கும் இறைவனை வணங்கி, அங்குள்ள ஞானமிர்தசரஸ் என்னும் தீர்த்தமும் ஆடியபின் மேலும் நடக்கலாம் மயூரநாதர் கோயிலை நோக்கி.

மயூரதாதர் கோயில் மாயூர நகரின் தென்பகுதியிலே தரங்கம்பாடி ரோட்டையொட்டி இருக்கிறது. இங்கு கோயில் கொண்டிருப்பவரை மயிலாடு துறையார் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அன்னையும் மயிலம்மை தான். அபயாம்பிகை, அஞ்சல்நாயகி என்றும் அழைப்பர், இந்தத் தலம் மயூரம் என்றும் இங்குள்ள இறைவன் மயூரநாதர் என்றும் அழைக்கப்படுவதன் காரணம் தெரியவேண்டாமா? இறைவனை மதியாது தக்கன் வேள்வி செய்கிறான். தக்கன் மகளாகிய இறைவி தாக்ஷாயணி தந்தையிடம் வாதாடச் செல்கிறாள். அவளையுமே மதிக்கிறானில்லை தக்கன். அவன் செய்யும் சிவ நிந்தனையைக் கேட்டு உலகமே அஞ்சுகிறது. அப்போது பக்கத்திலிருந்த மயிலும் அஞ்சி அம்மையை வந்து அடைகிறது. அவளும் மயிலுக்கு அபயம் கொடுக்கிறாள்.

பின்னர் தாக்ஷாயணி தக்கனின் வேள்வித் தீயிலே வீழ்ந்து விடுகிறாள். இறைவன் சங்கார தாண்டவம்