பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
184
 

கோலத்தையும் காட்டுவார்கள். அன்னையைக் காட்டுவார்கள், முருகனையுமே காட்டுவார்கள். கண்டு தொழுது கலை அறிவு பெற்றுத் திரும்பலாம் நாம். நடன உலகில் பிரசித்தி பெற்ற ஆசிரியர் வழுவூர்ராமையாபிள்ளை என்பது தெரியும். கஜசம்ஹார நடனம் நடந்த இடத்தில் பிறக்கும் பாக்கியம் பெற்றவர் சிறந்த நடன ஆசிரியராகப் பணியாற்றுவது வியப்பில்லை. வழுவூரால் அவர் பிரசித்தி பெற்றிருக்கிறார். ஏன்? ராமையா பிள்ளையாலுமே வழுவூர் இன்று கலை உலகில் பிரசித்தி பெற்றதாகத்தானே இருக்கிறது.

வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf