பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

201

கொடுத்த கொதிக்கின்ற கருவையே உண்டு செப்புச் சிலையாக நின்றுவிட்டார் என்பார்கள். உண்ண வந்து அமர்ந்தவர் நின்று கொண்டா இருந்திருப்பார் என்று எண்ணிய நிர்வாகிகள் அவரையே இருந்த கோலத்திலும் புதிதாக ஒரு வடிவம் வார்த்து வைத்திருக்கிறார்கள். இந்த உத்தராபதி ஈசுவரர் சந்நிதிக்கு எதிரேதான் அவர் வந்து முதலில் தங்கியிருந்த ஆத்திமரம். மரத்தைப் பார்த்தாலே அது எவ்வளவு பழையமரம் என்று தெரியும். இனி வெளிப் பிராகாரத்துக்கு வந்து மேற்க நோக்கி நடந்தால், வாதாபி கணபதியைத் தரிசிக்கலாம். இத்தலத்திலே நிறைய விநாயகர் வடிவங்கள் உண்டு, இன்னும் சிறப்பாக இங்கு ஒரு அம்சமும் உண்டு. வாதாபி கணபதி, உத்தராபதியார், அம்பிகை எல்லோருக்குமே இரண்டிரண்டு கைகள்தாம். இவை யெல்லாம் கூர்ந்து கவனிக்கத்தக்கவை.

மேலப் பிராகாரத்துக்கு வந்து வடக்கே திரும்பினால் இத்தனை சிரமப்பட்டு இத்தலத்துக்கு வந்து இவ்வளவு நேரம் சுற்றியதும் வீண் அல்ல என்று காண்போம். இங்குதான் நவதாண்டவ மூர்த்திகள் நிற்கிறார்கள், நல்ல கற்சிலை உருவிலே. சிவதாண்டவம் ஏழு என்பர் ஒரு சிலர். அதுவும் தவறு, தாண்டவத்திருவுருவம் நூற்றுஎட்டு என்பர் சிற்ப நூல் வல்லார். ஒரு கணக்கிலும் சேராமல் நவதாண்டவம் என்று எழுதியிருக்கும். அங்கே இருப்பது என்னவோ எட்டுப்பேர்கள்தான். புருங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவ தாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிக்ஷாடனர், திரிபுரசம்ஹாரர், பைரவர் என்பவர்களே அவர்கள். இவர்களுடன் உத்தராபதியாரையும் சேர்த்தே ஒன்பது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இவர்களில் நால்வரே தாண்டவத்திருவுருவினர். மற்றவர் தாண்டவர்கள் அல்ல. போகட்டும்; இந்த விவாதம் எல்லாம் நமக்கு வேண்டாம். இருக்கும் சிலாவடிவங்கள் அத்தனையும் அழகு வாய்ந்தவை. அழகுக்கு அஞ்சலி செய்து அமைதி