பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

வேங்கடம் முதல் குமரி வரை

கொண்டிருப்பவர் பெருமாள் என்று. இவர் அந்த ஊர் வந்து சேர்ந்தது அகாலத்தில், அப்போது நல்லமழைவேறே. மழைக்கு ஒதுங்க இடந்தேடி அலைந்து கண்ணபுரத்துக் கண்ணன் கோயிலுக்கே வருகிறார். பெருமாளுக்கோ இவர் பேரில் ஒரே கோபம், தன் பக்தனாக இருந்தவன் ஒரு கணிகையின் காதலுக்காகச் சிவபக்தனாக மாறிவிட்டானே என்று. ஆதலால், இவரைக் கோயிலுக்குள் அனுமதிக்க விரும்ப வில்லை . 'கண்ணபுரம் கோயில் கதவடைத்துத் தாழ் போட்டார் மண்ணையுண்டார், வெண்ணெய் உண்டமாயனார். காளமேகமோ சொட்டச் சொட்ட மழையில் நனைந்து கொண்டே கோயில் வாயிலுக்கு வந்து விடுகிறார். கதவடைத்துத் தாழ் போட்டிருப்பதைப் பார்க்கிறார். பெருமாளின் கோபத்தை அறிகிறார். பெருமாளைத் திருப்திப் படுத்துவார் போல் பாட ஆரம்பிக்கிறார். 'கண்ணபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்' என்று துவங்கினாரோ இல்லையோ, பெருமாளுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. காளமேகத்துக்கு இரங்கிக் கதவைத் திறந்து விடுகிறார். உள்ளே நுழைந்த காளமேகமோ, தொடர்ந்து பாடுகிறார் பாட்டை, 'உன்னிலுமோ நான் அதிகம்' என்று, ஐயோ! நாம் ஏமாந்து விட்டோமே என்று பெருமாள் எண்ணுவதற்குள், தாம் சொன்னதற்கெல்லாம் காரணத் தையுமே விளக்குகிறார் பாட்டில். முழுப்பாட்டும் இதுதான்.

கண்ணபுர மாலே!
கடவுளிலும் நீ அதிகம்;
உன்னிலுமோ நான் அதிகம்;
ஒன்று கேள்! - முன்னமே
'உன்பிறப்போ பத்து,
உயர் சிவனுக்கு ஒன்றும் இல்லை,
என்பிறப்போ எண்ணத்
தொலையாதே.

உண்மைதானே. பிறவி ஒன்றும் இல்லாததற்கு அவதாரம் பத்து பெரிதுதான். பத்தைவிட எண்ணத்