பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/211

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

209

ராஜனே அவளை மணந்து கொள்கிறார். இந்தப் பத்மினியையே வலைய நாச்சியார் என்கின்றனர். மாசி மகோத்சவத்தில், சௌரிராஜன் தன் மாமனார் அகமாம், திருமலை ராயன் பட்டினத்துக்கே சம்பிரமாகச் சென்று தீர்த்தம் ஆடிவருகிறான். இப்போது தெரிகிறது கண்ணபுரத்தானுக்கு ஏன் காதலிகள் நால்வர் என்பதற்குக் காரணம். ஆம்! கோகுலத்துக் கண்ணன் ராமனைப்போல் ஏகபத்தினி விரதன் அல்லவே. அவன் அறுபதினாயிரம் கோபியர்களை அல்லவா காதலிகளாகப் பெற்றிருக்கிறான். அறுபதினாயிரம் என்ன, உலகில் உள்ள ஜீவராசிகள் எல்லோருமே 'கண்ணன் எம் காதலன்' என்றுதானே அவனிடத்தில் ஈடுபட்டு நின்றிருக்கின்றனர். எத்தனை காதலியர்கள் இருந்தாலும் பட்டமகிஷி என்று ஒருத்தி இருக்கத்தானே செய்வாள். அவள்தான் இத்தலத்தில் கண்ணபுர நாயகி என்ற பெயரில் தனிக்கோயிலில் இருக்கிறாள். அவளையும் கண்டு தரிசித்துவிட்டுச் சேனை முதலியார், ராமன், விபீஷணாழ்வான் முதலியவர் சந்நிதிகளுக்கும் சென்று வணங்கித் திரும்பலாம். கோயில் திருப்பணி சிறப்பாக நடைபெறுகிறது.

பெருமாள் கோயிலுக்குச் சென்றால் நல்ல பிரசாதம் கிடைக்குமே, இங்கு ஒன்றும் கிடையாதோ? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. உண்டு, ஆனால் இந்தக் கோயிலில் சர்க்கரைப் பொங்கலையோ அக்காரடி சிலையோ எதிர்பாராதீர்கள். ஏதோ சில சமயங்களில் அவை கிடைத்தாலும் சிறப்புடையதாயிராது. இத்தலத்துக்கென்றே விஷேசமான பொங்கல் முனையதரன் பொங்கல் தான். இது 5 நாழி அரிசி, 3 நாழி பருப்பு, 2 நாழி நெய் சேர்த்துப் பக்குவம் செய்யப்படுகிறது. முனையதரன் என்ற பரம பக்தர் தினமும் தம் வீட்டில் பொங்கல் பண்ணிக் கண்ணபுரத்தானுக்கு நிவேதித்து வணங்கியிருக்கிறார். மறுநாள் காலை பார்த்தால் முனையதரன் இல்லத்திலிருந்து நீலமேகன் சந்நிதிவரை இப்பொங்கல் சிதறிக்கிடந் திருக்கிறது. வெண்ணெய் திருடி உண்டது போல முனைய

வே.மு.கு.வ -14