பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

211

23

புகலூர் மேவிய புண்ணியன்

றைவன் எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அவர் பக்ஷபாதமற்றவர் என்பதை மட்டும் ஒத்துக் கொள்ள மாட்டேன்' என்றார் ஒரு அன்பர். காரணம் கேட்டேன் அவரிடம். அவர் சொன்னார்: 'இந்த உலகிலே அவர் ஒருவனைச் செல்வச் சீமானாகப் படைக்கிறார், மற்றவர்களை ஏழைகளாகப் படைக்கிறார்; ஒருவனை நல்ல அறிவுடையவனாகப் படைக்கிறார், பலரை அறிவிலிகளாகப் படைக்கிறார், ஏன் ஒருவனை நல்ல திடகாத்திரமுடையவனாக நோய் நொடி இல்லாதவனாகப் படைக்கிறார், பலரை நோயாளிகளாகவே படைத்து விடுகிறார்; இது பாரபக்ஷமில்லாமல் என்ன? ஏன் எல்லோரையுமே செல்வந்தர்களாக, அறிவுடையவர்களாக, நோயற்ற வாழ்வு வாழக் கூடியவர்களாகப் படைக்கக் கூடாது?' என்பது நண்பர் கேள்வி. (ஆம், உண்மைதான்! இப்படி கடவுள் செய்யத் தவறியதைத் தானே இன்றைய சர்க்கார் பொது ஜன சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம் செய்து தீர்த்தே விடலாம் என்று நினைக்கிறார்கள். போகட்டும்! கடவுள் செய்யத் தவறியதில் இவர்களாவது வெற்றி பெற்றால் நல்லதுதானே) நண்பரது கேள்வி என்