பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

213

துயருறுகின்றபோது, இறைவனது இணையடியை நினைக்கும் பேறு பெற்றால் நாவுக்காரசரைப் போல, 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை' என்ற உறுதிப்பாடு உள்ளத்தில் தோன்றாதா? அது போதாதா? எங்கெங்கெல்லாமோ சுற்றிவிட்டு, புகலூர் மேவிய புண்ணியன் திருவடி சேர்ந்த நாவுக்கரசரது வாழ்வை நினைத்தால் தளரும் உள்ளத்துக்கே ஒரு தெம்பு பிறக்காதா? அதிலும்,

எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ?
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன், மற்றோர் களைகண் இல்லேன்,
கழல் அடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்,
ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்,
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே!

என்று நாவுக்கரசர் பாடிக்கொண்டே இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டார் என்ற செய்தியை அறிகின்ற போது நமக்கும் அந்த அருள் கிட்டும் என்ற நம்பிக்கை ஏற்படாதா? இத்தனை எண்ணமும் அப்பர் முத்திபெற்ற தலமாம் திருப்புகலூருக்கு நான் சென்றிருந்தபோது என் உள்ளத்தில் எழுந்தன. அந்தத் திருப்புகலூருக்கே அழைத்துச் செல்கிறேன் உங்களை எல்லாம் இன்று.

திருப்புகலூர் செல்லத் தஞ்சை ஜில்லாவிலே மாயூரம் திருவாரூர் ரயில் பாதையிலே நன்னிலம் ஸ்டேஷனில் இறங்கவேண்டும். அங்கிருந்து நாகூர் செல்லும் பாதையில் நான்கு மைல் வண்டியிலோ, காரிலோ செல்லவேண்டும். அவசரம் ஒன்றும் இல்லையென்றால் காத்து நின்று பஸ்கிடைக்கும்போது போகலாம். சரியாய் நாலு மைல் சென்றதும் வடபக்கத்தில் ஒரு 'ஆர்ச்' அமைத்து அதில் திருப்புகலூர் அக்னீசுவரர் கோயில்-அப்பர்