பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
214
வேங்கடம் முதல் குமரி வரை
 

முத்தி பெற்ற தலம் என்று கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருப்பார்கள். அந்த 'ஆர்ச்' வழியாக உள்ளே நுழைந்தால் திருக்கோயில் வாயிலுக்கு வந்து சேருவோம். கோயில் பெரிய கோயில், அதன் பரப்பு எழுபத்து மூவாயிரம் சதுரஅடி. கிழமேல் மதில் 325 அடி நீளம். தென்வடல் மதில் 225 அடி அகலம். இதைச் சுற்றி 130 அடி அகலமுள்ள அகழி. இந்த அகழியைச் சுற்றி விரிந்து பரந்து கிடக்கும் வெளி எல்லாமாகச் சேர்ந்து ஓர் அலாதிப் பிரேமையையே ஊட்டும் நம்மனத்தில். கோயிலின் நான்கு பக்கங்களிலும் அகழி இருந்தாலும் தென்கிழக்குப் பாகத்தில் கொஞ்சம் தூர்த்து, கோயிலுக்கு நல்லவழி ஒன்றை அமைத்திருக்கிறார்கள். இப்படிச் செய்யாவிட்டால் ஒன்று அகழியில் நீந்த வேண்டியிருக்கும் அல்லது தோணி ஒன்றின் உதவியை நாட

வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf
அப்பர்

வேண்டியிருக்கும். ஊருக்குத் தென்பக்கத்தில் உள்ள முடிகொண்டான் ஆற்றிலிருந்து பாய்காலும் வடிகாலும் இருப்பதால் அகழியில் எப்போதும் நீர் தெளிவாகவே இருக்கும்.

கோயிலை நெருங்கியதும் நாம் முதல் முதல் காண்பது ஞான விநாயகர் கோயில். இது தென் பக்கத்து அகழியின் தென்