பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

வேங்கடம் முதல் குமரி வரை

இறைவன். இன்றும் வடபுறமாகக் கோணி, வளைந்தே இருக்கிறது லிங்கத் திருவுருவம். அதனால் கோணப்பிரான் என்றே அழைக்கப்படுகிறார். இவரையே சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் பாடி இருக்கிறார்கள்.

அக்கினீஸ்வரரே இக்கோயிலின் முதல்வர் என்றாலும் இவருடன் தோளுக்குத் தோள் சரி நிற்கிறவர்,

அக்கினி

வடபால் உள்ள வர்த்தமானீச்சுரர். இவர் கோணாமல் நேரே நிமிர்ந்து நிற்கிறார். இவருக்கும் இவர் துணைவி மனோன்மணிக்கும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட இடம் சிறிதே என்றாலும் இந்த சந்நிதியைத் தேடியே, இத்தலத்தில் அவதரித்த முருக நாயனார் வந்து நிற்கிறார். இந்த வர்த்த மானீச் சுவரரையே,

'மூசு வண்டறை கொன்றை
           முருகன் முப்போதும் செய்முடிமேல்
வாசமாமலர் உடையார்
           வர்த்த மானீச்சரத்தாரே

என்று பாராட்டி, ஞானசம்பந்தர் தனியாக ஒரு பதிகமே பாடியிருக்கிறார். கோணப்பிரானையும் வர்த்தமானீச்