பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
225
 
வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf
கோனரி ராஜபுரம் நடராஜர்

உயரத்தில் சிவகாமி. இருவரும் செப்புச்சிலை வடிவில் இருந்தாலும் அவர்கள் நிலைத்தே நிற்கிறார்கள், உற்சவ காலத்தில் வெளியே எடுப்பது தெரு வீதிகளில் உலா வரப் பண்ணுவது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. இதற்காகவே ஒரு சிறு நடராஜரையும் செய்து வைத்திருக்கிறார்கள். இரண்டு நடராஜரையும் ஒப்பிட்டு நோக்கினால்தான், கலை அழகு என்றால் என்ன என்பது தெரியும். காத்திரமான பெரிய நடராஜர்; கலை உலகிலேயே பெரியவர். இன்னும் திரிபுராந்தகர், திரிபுரசுந்தரி இருவரும் செப்புச்சிலைவடிவில் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர மணக்கோல நாதர் வேறே இருக்கிறார். எல்லோருமே நல்ல கலை அழகு வாய்ந்தவர்கள்.

முன்பு செங்கல்லால் கட்டப்பட்டிருந்த கோயிலைக் கற்றளியாக்கிய பெருமை, அந்தச் செம்பியன் மாதேவி என்ற பெருமாட்டியைச் சேரும். அவள் தன் கணவர் கண்டராதித்தர் சிவலிங்கத்துக்குப் பூஜைசெய்வது போல ஒரு சித்திரம் அமைத்து வைத்திருக்கிறாள். சிறியன சிந்தியாது பெரு உடையாருக்குப் பெரிய கோயில் எடுப்பித்த

வே.மு.கு.வ -15