பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

வேங்கடம் முதல் குமரி வரை

கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் ஆளுடைய நாயகரான பிள்ளை செயதரப்பல்லவராயர் கட்டியது. மூன்று கோயில்களுக்கும் போக அவகாசமிருப்பவர்கள் போகட்டும். நாம் இத்தலத்தின் பிரதான கோயிலான சொன்னவாறு அறிவார் கோயிலுக்குச் செல்வதோடு திருப்தி அடையலாம். கோயில் சமீபத்தில்தான் புதுப்பிக்கப்பட்டுக் கும்பாபிஷேகம் எல்லாம் நடந்திருக்கிறது. கோயில், கோயில் பிரகாரங்கள் எல்லாம் வெகு நேர்த்தியாய் வைக்கப்பட்டிருக்கும். பார்த்த உடனேயே 'இது தருமபுரம் ஆதீனத்தைச் சேர்ந்த கோயிலோ?' என்று கேட்கத் தோன்றும். அந்த ஆதீனக் கோயில்களில் ஒன்றுதான் என்றும் தெரிந்து கொள்வோம்.

குத்தாலம் சண்டீசர்

இங்குள்ள கோயில் மேற்கே பார்த்த சந்நிதி. கோயில் ராஜகோபுரத்தைக் கடந்ததும் நம்முன் நிற்பது உத்தால மரமும் அதைச் சுற்றிக் கட்டிய பீடமும்தான். அந்த மரத்து அடியிலே இரண்டு திருவடிகள் (ஆம்! பாதரக்ஷைதான் ) இருக்கின்றன . இறைவியை மணக்க வந்த இறைவன் பாத ரக்ஷைகளைக் கழற்றி விட்டுத் திருமணம் செய்திருக்கிறார். திரும்ப அந்தர்த் தியானமாகும் போது பாத ரக்ஷையைக் காலில் மாட்டிக்