பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2

ஆமாத்தூர் அம்மான்

ரு குடும்பத்திலே அண்ணன் தம்பி இருவருக்கிடையே பாகப் பிரிவினை. பாகப் பிரிவினை என்றால் அண்ணன் தம்பியரிடையே மனக் கசப்பு, அதனால் ஏற்படும் பிணக்குகள், விபரீதங்கள் எல்லாம் நாம் அறிந்தவைதானே. (சமீபத்தில் திரைப்படமாக வந்த பாகப்பிரிவினையைப் பார்த்தே எல்லோரும் பாகப் பிரிவினை என்றால் எத்தனை மனக் கசப்புகள் அண்ணன் தம்பிமாரிடையே வளர்கிறது என்று தெரிந்து கொள்கிறோமே. ஆனால் நான் சொல்லும் கதையிலோ, பாகப் பிரிவினையில் அண்ணன் தம்பிக்குச் செய்யும் துரோகத்தால் அவன் அழிந்தே போகிறான். தெய்வ கோபத்துக்கே ஆளாகிறான்.) குடும்பத் தலைவனான தந்தை இறக்கும் போது மூத்த மகன்தான் உடன் இருக்கிறான். இளையவன் வெளியூர் சென்றிருக்கிறான். பின்னரே இளையவன் ஊர் திரும்புகிறான். ஈமக் கடன்கள் எல்லாம் கழிந்ததும், தன் தந்தையின் செல்வத்தில் பங்கு எதிர்பார்த்த இளையவன் அண்ணனை அணுகித் தனக்கு உரியதைப் பகிர்ந்து கொடுக்க