பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

257

அகலமும். (இது எப்படித் தெரிந்தது என்று கேட்காதீர்கள். பல வருஷங்களுக்கு முன்பு இக்கோயில் கலசம் விழுந்திருக்கிறது. 1951-ம் வருஷம், தஞ்சை வெற்றிவேல் பிரஸ் அதிபர் திரு. பக்கிரிசாமி பிள்ளையின் முயற்சியால் கலசம் புதுப்பிக்கப்பட்டுத் தஞ்சையில் இருந்து ஒரு பெரிய லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது உடன் இருந்து காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இனி நான் சொல்வதை நம்புவீர்களல்லவா?) கருவறையைச் சுற்றிய கோஷ்டங்களில், நர்த்தன விநாயகர், நடராஜர், அர்த்தநாரி, கங்காதரர், பிக்ஷாடனர், லிங்கோத்பவர் எல்லாம் இருக்கிறார்கள். நாம் காணவந்தது இவர்களை அல்லவே.

ஆகவே விறுவிறுஎன்று நடந்து வடக்குப் பிராகாரம் வந்து அங்கிருந்து அர்த்த மண்டபம் செல்வதற்கு

சண்டீச அனுக்கிரஹமூர்த்தி

அமைத்திருக்கும் படிகளில் ஏறி மேற்கே திரும்பினால் நான் முன்சொன்ன சண்டீச அனுக்கிரக மூர்த்தியைக் காணலாம். நல்ல கம்பீரமான கற்சிலை, அன்னை பார்வதியுடன் அத்தன் அமர்ந்திருக்கிறார் ஒரு பீடத்தில். அவர் காலடியில் சண்டீசர் கூப்பிய கையுடன்

இறைவனோ கொன்றை மாலையை, சண்டீசர் தலையைச் சுற்றி அலங்கரிக்கிறார்.

வே.மு.கு.வ-17