பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

வேங்கடம் முதல் குமரி வரை

இன்னம் என்ன எல்லாமோ செய்கிறார். யோகாசனம் பயில்பவர்கள் இவரையே குருவாக அடையலாம் போலும்.) கலயர் புகழ் வளர்கிறது. இவரது மகன் இறந்து பட, அந்த உடலைத் தகனம் செய்ய எடுத்துப் போக, வழியில் உள்ள பிள்ளையார் வழி மறித்து நாக கன்னிகைத் தீர்த்தத்தில் தீர்த்தமாட்டி வீட்டுக்கு எடுத்துச் செல்லச் சொல்கிறார். வீடு சென்ற மகன் உயிர் பெற்று எழுகிறான். இப்படி வழி மறித்த விநாயகரே இன்று திருப்பனந்தாளிலே வாயு மூலையிலே பிணம் மீட்ட விநாயர் என்ற பெயரோடு வதிகிறார். இத்தனை விவரங்களையும்,

நினைவரிய தாடகைக்கு
அருள் மேனி சாய்த்தவன்,
நிமிராமல் மன்னனுக்கு
நிறை கலையனார்க்கு
முன்போல் நிமிர்ந்தவன்,
நிறை கலையனார் அளித்த
தனயன் உயிர் போனபின்
மீட்ட நாயகன்

என்று சிதம்பர முனிவர் அயிராவதப் பிள்ளையின் பிள்ளைத் தமிழில் பாடுகிறார்.

செஞ்சடையப்பர், பெரியநாயகி, தாடகை, கலயர் எல்லோரையும் அறிமுகம் செய்து கொண்டபின் சுற்றுக் கோயில்களுக்கும் செல்லலாம். ஆலயத்துக்குத் தென் மேற்கு மூலையில் உள்ள ஊருடையப்பர் கோயிலிலும் சென்று வணங்கலாம். பிரமன் ஐராவதம் முதலியோர் வழிபட்டது என்பர். இன்னும் இத்தலத்தில் வழிபட்டுப் பேறுபெற்றவர்கள் அனந்தம் என்று தலவரலாறு கூறும். இந்தச் செஞ்சடை அப்பர் கோயிலுக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார், ஒரு பதிகம் பாடியிருக்கிறார்.

விடை உயர் வெல் கொடியான், அடி
வின்ணொடு மண்ணும் எல்லாம்