பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/290

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
288
வேங்கடம் முதல் குமரி வரை
 

பராக்கிரம பாண்டியனும் மூன்றாம் குலோத்துங்கனுமே. குலோத்துங்கனின் ஆசிரியரும் ஸ்ரீகந்த சம்புவின் புதல்வருமான ஈசுவர சிவன் இக்கோயிலைப் பிரதிஷ்டை செய்தார் என்று ஒரு கல்வெட்டு கூறும். குலோத்துங்கன் பெற்ற வடநாட்டு வெற்றிகளைக் கூறும் கல்வெட்டுக்களும் உண்டு. மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்களைப் பற்றியெல்லாம் விவரிக்கும் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. மேலும், மீமாம்சமும், தமிழும், திருப்பதிகங்களும் முறையே ஓத விரிவான பல்கலைக்கழகம் ஒன்றும் அங்கு இருந்திருக்கிறதென்று அறிகிறோம். இப்போதுகூட ஒரு பல்கலைக்கழகத்தை கலை வளர்க்கும் கூடத்தை அங்கே ஆரம்பிக்கலாம். அதைக் கவனிக்கவேண்டியவர்கள் ஆதீன கர்த்தர் அல்லவா; நான் இல்லையே.