பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3

அழல் உருவன்
அண்ணாமலையான்

ரு பலத்த போட்டி, பிரம்மாவுக்கும் மகாவிஷ்ணுவுக்கும்தான். ஆம் தந்தையும் மகனுமே தம்மில் யார் பெரியவர் என்று வாதமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாதத்தைத் தீர்த்து வைக்க சிவபிரான் வருகிறார். எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார். இருவரும் கேட்கிறபடியாக இல்லை. கடைசியாக அவரே ஒரு போட்டியை ஏற்பாடு பண்ணி அந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பெரியவர் என்று தீர்மானிக்கலாம் என்கிறார். இருவரும் இசைகிறார்கள்.

அவ்வளவுதான், அவர் வானுற ஓங்கி வளரும் ஒரு அழல் பிழம்பாக மாறுகிறார். அந்த அற்புத உருவின் அடியையோ முடியையோ யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என்று போட்டி அமைகிறது. மகா விஷ்ணு வராக உருவில் அடிதேடப் புறப்படுகிறார். அதல பாதாளங்களையே ஊடுருவிச் செவ்கிறார். அன்ன உருவில் பிரம்மா வானுலகில் பறந்து பறந்து செல்கிறார் முடிகாண, சென்று கொண்டே இருக்கிறார்கள் இருவரும். அடியையோ முடியையோ கண்டபாடாக இல்லை இருவருக்கும். இருவரில் விஷ்ணு கொஞ்சம் யோக்கியமானவர். ஆதலால் அடியைக் காண இயலவில்லை என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டு திரும்பிவிடுகிறார் பூலோகத்திற்கு. பிரம்மா