தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
39
செய்கிறார். இறைவனின் பிள்ளைகளாக மக்கள் இருப்பதை அறிவோம். இறைவனே பக்தனது பிள்ளையாக மாறி அவனுக்கு ஈமக்கடன் செய்யும் முறையை இங்கேதான் அறிகிறோம்.
இக்கோயிலில் நூற்று ஆறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. உத்தமச்சோழன், பரகேசரிவர்மன், ராஜேந்திர சோழதேவன், திரிபுவன சக்கரவர்த்தி ராஜராஜ தேவன் முதலிய சோழ மன்னர்களும். மாறவர்மன், குலசேகரன் முதலிய பாண்டிய மன்னர்களும் ஏற்படுத்திய நிபந்தங்களைக் குறிக்க எழுந்தவையே இதில் பெரும் பகுதியான கல்வெட்டுக்கள். கீழ் வாசலில் உள்ள ராஜ கோபுரத்தை விஜய நகர மன்னன் கிருஷ்ணதேவராயன் கட்டி முடித்தான் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது, இவனே ஆயிரக்கால் மண்டபம், சிவகங்கைக்குளம் முதலியவற்றை உருவாக்கியவன் என்றும் அறிகிறோம். விஜயநகர நாயக்க மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்ட ராஜ நாராயண சாம்புவராயன் ஒரு கோபுரம் கட்டினான் என்றும் அந்தக் கோபுரத்தில் இருந்தே 'ஜீரணோத்தார தாஸகம்' என்ற கோயில் திருப்பணி விளக்க நூலை வாமதேவன் எழுதினான் என்றும் ஒரு கல்வெட்டு கூறுகின்றது. கோயில் நிரம்பப் புராதனமான கோயில் என்பதும், இக்கோயிலைச் சோழர், பாண்டியர், நாயக்கர், நகரத்தார் எல்லாம் கட்டியும் புதுப்பித்தும், நிபந்தங்கள் ஏற்படுத்தியும், பாதுகாத்திருக்கிறார்கள் என்றும் அறிகிறோம்.
கோயிலை விட்டு வெளியே வருமுன் உங்களை ஓர் அற்புதமான மூர்த்தியின் முன்னர் கொண்டு சென்று நிறுத்த விழைகிறேன். ராஜராஜசோழனுக்கு முந்திய சோழ மன்னர்கள் கட்டிய கோயில்களில் எல்லாம் கர்ப்பக் கிரகத்திற்கு வெளியே மேற்கே பார்த்த கோஷ்டத்தில் அர்த்தநாரியின் அழகிய சிலாவுருவம் இருக்கப் பார்ப்போம். ஆனால் அற்புதமாக செப்புச் சிலை வடிவத்தில் நடராஜரையும், திரிபுராந்தகரையும், பிக்ஷாடணரையும் வடித்தெடுத்த சோழநாட்டுச் சிற்பிகள்