பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

வேங்கடம் முதல் குமரிவரை என்ற தொடரின் முதல் புத்தகம் பாலாற்றின் மருங்கிலே என்ற தலைப்போடு வெளிவந்து ஒன்பது மாதங்கள் தாம் ஆகின்றன. அதற்குள் அதே தொடரில் 'பொன்னியின் மடியிலே' என்ற தலைப்போடு இரண்டாவது புத்தகமும் வெளிவருகிறது. இவ்வளவு விரைவில் இப்புத்தகம் வெளிவரக் காரணமாக இருந்தவர்கள் தமிழ்நாட்டு ரஸிக நண்பர்களே. 'கல்கி'யில் வெளிவரும் தொடர் கட்டுரைகளைப் படித்துவிட்டு அவற்றையெல்லாம் தொகுத்து புத்தக உருவில் எப்போது வெளியிடப் போகிறீர்கள் என்று கடிதத்திற்குமேல் கடிதம் எழுதிய அன்பர்கள் பலர். முதல் புத்தகம் வெளிவந்த உடனே 'இந்த ஆண்டின் அருமையான புத்தகம் இது' என்று பாராட்டி அதற்கு ஆயிரம் ரூபாய் பரிசொன்றையும் தந்து ஊக்குவித்தவர் சென்னை அருணாசலம் படத்தயாரிப்பாளர் திரு. ஏ. கே. வேலன் அவர்கள். இவர்கள் எல்லாம் காட்டிய ஆர்வமும், தந்த ஊக்கமுமே பொன்னியின் மடியிலே இச்சிறு குழந்தையையும் தவழவிடும் பாக்கியத்தைத் தந்திருக்கிறது எனக்கு.

வேங்கடத்தில் ஆரம்பித்து மதுராந்தகம் வரை தொண்டை நாட்டில் நடத்திய தல யாத்திரையே பாலாற்றின் மருங்கிலே என்ற தலைப்பில் வெளிவந்தது, அத்தலயாத்திரையின் இரண்டாவது சுற்று, நடு நாட்டில் உள்ள மயில மலையில் துவங்கி, தெய்வப் பொன்னி பாய்ந்து பெருகும் சோழநாட்டின் வடகீழ்ப் பகுதிகளையெல்லாம் கடந்து. கும்பகோணத்தை அடுத்த திரிபுவனத்தில் நிறைவுற்றிருக்கிறது. பொருப்பிலே பிறந்து, தென்னன் புகழிலே கிடந்து, சங்கத்து இருப்பிலே இருந்து, வைகை ஏட்டிலே தவழ்ந்தவள் தமிழ் அன்னை . நமது தலயாத்திரையும் பாலாற்றின்