பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56
வேங்கடம் முதல் குமரி வரை
 

இத்தனையும் பார்த்தாலும் அந்த வன் தொண்டரைக் காணவில்லையே என்று எண்ணுவோம். அவருக்கு இந்தக் கோயிலில் முக்கிய இடம் உண்டு. கோயிலின் தெற்குப் பிராகாரத்திலே மேற்கே பார்த்த சிறுகோயிலில் செப்பு வடிவிலே இவரைச் சமைத்து வைத்திருக்கிறார்கள். மற்றக் கோயில்களில் எல்லாம் கோலாகலமாக இருக்கும் இந்த ஆலாலசுந்தரர், இங்கு அடக்க ஒடுக்கமாக அடிமை ஓலை ஏந்திய கையராய் நிற்கிறார். நிரம்பவும் பிற்பட்ட காலத்திலேதான் செய்து வைத்திருக்க வேணும். அவரைப் பார்த்து விட்டே திரும்பலாம். இந்தக் கோயிலிலே கல்வெட்டுக்கள் பிரசித்தம். எல்லாம் பன்னிரண்டாம் - பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுந்தவை. அவைகளில் இரண்டு முக்கிய மானவை. ஒன்று கோப்பெருஞ்சிங்கன் காலத்தியது. 1268-ல் வெட்டப்பட்டது. செஞ்சியைச் சேர்ந்த உடையான் ஸ்ரீ கைலாயமுடையான், திருவெண்ணெய் நல்லூர் ஆட்கொண்ட தேவருக்குப் பிச்சன் பாடச் சொன்னான் என்றும், பெயருடைய இரண்டு வெள்ளிமுரசும் ஒரு பொன் கல்காறையும் தானம் செய்ததைப் பற்றியும். மற்றொன்று குலோத்துங்க சோழன் காலத்தியது, வழக்கு வென்ற திருவம்பலம் என்ற கல்மண்டபம் கட்டச் சில குடிகளுடைய வீடுகளை எடுத்துக் கொண்டு வேறு இடம் தந்ததைக் குறிக்கும். இம்மண்டபமே கோயில் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் இருக்கிறது. இவை தவிர, தடுத்து ஆட்கொண்ட தேவர், ஆவணம் காட்டி ஆட்கொண்டான் என்றெல்லாம் கல்வெட்டில் குறிப்புகள் இருக்கின்றன. இன்னும் திருவெண்ணெய் நல்லூருக்குக் கிழக்கே இரண்டு மைல் தொலைவில் தடுத்து ஆட்கொண்ட ஊர் என்று ஒரு கிராமமும் அதற்கும் கிழக்கே பண்ணுருட்டி ரோட்டில், பண்ணுருட்டிக்கு மேற்கே நான்கு மைல் தொலைவில் மணம் தவிர்த்த புத்தூர் என்று ஒரு கிராமமும் இருக்கின்றன. இவையெல்லாம் சுந்தரனை இறைவன் தடுத்து ஆட்