பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

வேங்கடம் முதல் குமரி வரை

பூக்கவோ, காய்க்கவோ செய்கிறதில்லை. பாதிரி பூக்கும், காய்க்காது என்ற கவிஞனையும் அல்லவா விஞ்சி யிருக்கிறது இந்தப் பாதிரி. இந்தப் பாதிரி மரத்தையுடைய திருப்பாதிரிப்புலியூர் கோயிலுக்குத்தான் இன்று செல்கிறோம் நாம்.

திருப்பாதிரிப்புலியூர் - கோயில்

தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமை நகரம் கடலூர் என். டி. அந்த ஸ்டேஷனில் இறங்கி வடமேற்காகச் செல்லும் பாதையில் அரை மைல் சென்றால் திருப்பாதிரிப் புலியூர் கோயில் வாயிலுக்கு வந்து சேரலாம். கோயிலின் ராஜகோபுரத்துக்கும் முந்திக் கொண்டு ஒரு மண்டபம். அந்த மண்டபத்துக்கு வடக்கே ஒரு குளம் நல்ல படிகட்டுகளுடன். இதனையே சிவகரதீர்த்தம் என்கிறார்கள். கோயில் முன் மண்டபத்திலே குதிரை வீரர்களை ஏந்தி நிற்கும் கற்றூண்களும் பழைய கலைஞர்கள் செய்ததல்ல, இன்றைய கலைஞர்கள் வேலையே. ஆதலால் கவர்ச்சிகரமாக இல்லை.