பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

69

கல்தூண்

அந்த மண்டபத்திலிருந்து தெற்கே கோயில் மதிலைச் சுற்றப் புறப்பட்டால், கோயில் காவல்காரரே சொல்வார். அங்கெல்லாம் ஒன்றுமில்லை வீணாக அலைய வேண்டாம் என்று. ஆதலால் நாம் கோயிலுக்குள்ளேயே துழையலாம். கலையழகு இல்லாவிட்டாலும், கடவுளர் இருக்கிறாரே அவரைக் கண்டு வணங்கி அருள் பெறலாம்தானே. நல்ல பெரிய பிரகாரம்; அதற்கேற்ற பிரும்மாண்டமான தூண்கள். எல்லாம் கூடாது குறையாது அளவோடு இருக்கும். இந்தப் பிராகாரத்தைப் பார்த்தால் கோயில் கட்ட பத்து லக்ஷமாவது செலவாகியிருக்க வேண்டும் என்று தோன்றும். பிராகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றினால் தகடு பொதிந்த பாதிரி மரத்தையும் பார்க்கலாம். இறைவன் சந்நிதிக்கு வந்து அவரை வணங்கிவிட்டு, வடபுறம் இருக்கும் அம்மன் கோயிலுக்குப் போகலாம். இங்கும் தூண், மண்டபம், கர்ப்பக் கிருஹம் எல்லாமே புதிதுதான். அம்மை பெரிய நாயகியைத் தரிசித்துவிட்டு வெளியே வரலாம்.

தலத்தை விட்டுக் கிளம்பு முன் இத்தலத்துக்குப் பாதிரிப் புலியூர் என்று பெயர் வரக் காரணம் என்ன என்று