பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வேங்கடம் முதல் குமரி வரை

ஆனால் அதற்கெல்லாம் திருநாவுக்கரசர் அஞ்சிவிட வில்லை. அவருக்கோ சிவபிரானிடம் அழியாத நம்பிக்கை.

சொல்துணை வேதியன்,
சோதி வானவன்,
பொன்துணை திருந்து அடி
பொருந்தக்கைதொழ,
கல்துணைப்பூட்டி ஓர்
கடலில் பாய்ச்சினும்,
நல்துணையாவது
நமச்சிவாயவே!

என்று பாடுகிறார். நீரில் மூழ்கும் கல் நாவுக்கரசருக்குத் தெப்பமாகி மிதக்கிறது. அலைமோதும் கடல் தெப்பத்தோடு சேர்ந்த நாவுக்கரசரைக் கரை சேர்க்கிறது. இப்படி நாவுக்கரசர் கரையேறிய இடம் இன்றும் கரை ஏறவிட்ட குப்பம் என்ற பெயரோடேயே கடலூர் பக்கத்தில் நிலவுகிறது. பாதிரிப்புலியூர் அரன், தோன்றாத் துணை யாயிருந்து நாவுக்கரசர் நல்வாழ்வு பெற உதவியிருக்கிறான். இதை நினைத்தே,

ஈன்றாளுமாய், எனக்கு எந்தையும்
ஆய், உடன்தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்து
உகந்தான் மனத்து உள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன்
திருப்பாதிரிப்புலியூர்
தோன்றாத்துணையாயிருந்தனன்
தன்னடி யோங்களுக்கே.

என்ற பாடுகிறார் நாவுக்கரசர். இப்பாடலை நாவுக்கரசர் பாடிய பின்னரே, இத்திருப்பாதிரிப் புலியூர் அரனுக்குத் தோன்றாத் துணைநாதர் என்ற பெயர் நிலைத்தது போலும். இப்படி நாவுக்கரசர் கரையேறியதை இன்று சித்திரை அனுஷ