பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

8


பழமலை நாதர்

சைவ சமய குரவரில் ஒருவரான சுந்தரர் ஒரு தலத்துக்குப் போனார். அந்த ஊர்ப் பெயர் என்ன என்ற விசாரித்தார். விருத்தகிரி என்றார்கள். அங்கு கோயில் கொண்டிருப்பவர் யார் என்றார், விருத்தகிரி ஈசுவரர் என்றார்கள். 'அம்பிகை?' என்றார். 'ஆம். அவளும் விருத்தாம்பிகையே' என்றார்கள். 'என்ன இந்த ஊர், இந்த உரில் உள்ள இறைவன், இந்த இறைவனது துணைவி எவ்லோருமே கிழடு தட்டியவர்களாக இருக்கிறார்களே. இங்கு நமக்கு ஜோலியில்லை', என்று சொல்லி மேலும் நடையைக் கட்டினார். இப்படி ஓடிவிட்டால் விருத்தகிரி ஈசுவரர் விட்டு விடுவாரா? 'ஏனப்பா என்னைப் பாராதே, என்னைப் பாடாதே போகிறாய். என் மனைவி அப்படி ஒன்றும் கிழவியில்லை; வந்துதான் பாரேன்' என்று அழைக்கிறார். சுந்தரர் வருவதற்கு முன்னே, ஒரு பாலாம்பிகையைச் சிருஷ்டி பண்ணித் தம் பக்கத்தில் வைத்துக் கொள்கிறார். இந்தப் பாலாம்பிகையைப் பார்த்த பின்னரே சுந்தரர் பாடத் துவங்கினார் விருத்தகிரியாரை. விருத்தாம்பிகை கோயில் வெளியில் இருக்க, பாலாம்பிகை சந்நிதி விருத்தகிரியார் கோயில் உள்ளேயே இருப்பதைப் பார்த்து இன்றும் மக்கள், 'பாருங்களேன் இந்தக் கிழவன்