பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வேங்கடம் முதல் குமரி வரை

வாயிலைக் கடந்து வந்தால் பரந்த வெளிச்சுற்று. இதனையே கைலாயப் பிராகாரம் என்பர். இங்கு பார்க்க வேண்டியவை விபசித்து முனிவர் மண்டபம், அக்கினி தீர்த்தம், ஆழத்துப் பிள்ளையார் கோவில், சக்கர தீர்த்தம், ஆகமக் கோயில்கள். இவற்றையெல்லாம் சுற்றிப் பார்க்கக்

காலில் நல்ல வலுவேண்டும். போதிய அவகாசமும் வேண்டும். அவை எல்லாம் இல்லாதவர்கள் பிள்ளையாரைத் தரிசித்து விட்டுக் கோயிலுள் நுழைந்து விடலாம். இவர் பூமியில் தன் தளத்துக்குப் பதினெட்டு அடி தாழ்ந்து ஆழத்தில் தனிக் கோயிலில் இருக்கிறார்.

இரண்டாவது சுற்று மதிலும், வெளிச் ஆழத்துப் பிள்ளையார் கோயில் சுற்று மதிலைப் போலவே கனமானது, உயர்ந்த கோபுரம் உடையது. இந்த மதில் சுவருக்குள்ளேயே வன்னியடிப் பிராகாரம் இருக்கிறது. இங்கு தலவிருக்ஷம் வன்னிமரம் ஆயிற்றே. வன்னி மரத்தடியிலே, விபசித்து முனிவர், உரோமச முனிவர், விதர்க்கண செட்டி, குபேரன் தங்கை எல்லாரும் இருக்கிறார்கள். இப்பிராகாரத்தின் தென் மேற்கு மூலையில் வல்லபைக் கணபதி இருக்கிறார். ஏதோ பிரம்மச்சாரி என்று