பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

79

நாம் நினைத்துக் கொண்டிருப்பவர், வல்லபையைத் தூக்கி மடியில் இருத்திக் கொண்டு உல்லாசமாய் இருப்பதைப் பார்க்கிறோம்.

இந்த வன்னியடிப் பிரகாரத்தைச் சுற்றி வந்தால் கொடி மண்டபத்துக்கும் மேற்கேயுள்ள இசை மண்டபத்துக்கு வந்து சேருவோம். அம்மண்டபத்தில்தான் பெரிய நாயகர் (பெரிய நாய்க்கர் இல்லை ) இருக்கிறார். இவரே இக்கோயிலில் உள்ள பெரிய உற்சவமூர்த்தி என்றாலும் ஆண்டுக்கு ஒரு முறை மாசிமகம் ஆறாம் நாள் மட்டுமே வெளியே உலாவ வருவார். மற்ற உற்சவங்களுக்கு ஒரு 'டெபுடி' நியமித்திருக்கிறார். அவர்தான் சின்னப் பழமலைநாதர். அவரைக் கோயிலுள் சென்று பார்க்கலாம். இந்த இசை மண்டபத்தின் வட பக்கத்தே நடராஜர், சிவகாமி அம்மையுடன் கொலு இருக்கிறார். அவர்களையும் வணங்கிவிட்டே உள்மதிலையுங் கடந்து பிரதான கோயிலுள் நுழையலாம். இங்குள்ள பிராகாரத்தை அறுபத்து மூவர் பிராகாரம் என்பர். அறுபத்து மூவரோடு எண்ணற்ற திருவுருவங்கள் இந்தப் பிராகாரத்திலே. அவர்களில் முக்கியமானவர்கள் யோகதக்ஷிணாமூர்த்தி, மாற்றுரைத்த பிள்யைார், பிந்து மாதவப் பெருமாள் முதலியோர், இங்கேயே சின்னப் பழமலை நாதரும் இருக்கிறார். நல்ல சோமாஸ் கந்த வடிவினர் அவர். இங்கு வடமேற்கு மூலையிலேதான் இளமைநாயகியார் கோயில்.

ஆம், விருத்தாம்பிகையை ஒதுக்கி வைத்துவிட்டு இளைய மனைவியை நெருக்கமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார் முதுகுன்றர் என்ற பரிகாசத்துக்கு எல்லாம் உள்ளானவள் அவள், இத்தனைச் சுற்றுச் சுற்றி இவ்வளவு தூரம் நடந்ததெல்லாம் பழமலை நாதரைக் காணவே. அவரையே காணலாம் கர்ப்பக் கிருஹத்தில். நல்ல அழகான லிங்கத் திருவுரு. அவரை வணங்கித் தொழுதுவிட்டு விறுவிறு என வெளியே வந்து, இரண்டாம் பிராகாரத்து வடக்கு வாயில் வழியாய் அன்னை பெரிய