பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

81

இக்கோயில் ஆதியில் விபசித்து முனிவரால் கட்டப்பட்டிருக்கிறது. ஆதனால்தான் இன்றுவரை விபத்துக்கள் ஒன்றுக்கும் ஆளாகாமலே நின்று கொண்டிருக்கிறது. இக்கோயிலின் பெரும் பகுதியைக் கற்றளியாகத் திருப்பணி செய்தவர். கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன்மாதேவியே. ராஜராஜ சோழனுக்கு முன் சோழ நாட்டைச் சிறிது காலமே ஆண்ட உத்தம சோழனின் உத்தமத் தாய். சிறந்த சிவபக்தை. ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் திருப்பணிகள் நடந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஏழிசை மோகனான குலோத்துங்க சோழ காடவராதித்தன், ஏழிசை மோகன திருமண்டபம் கட்டினான் என்று இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. கச்சிராயன், வீரசேகரக் காடவராயன், நாயக்க மன்னர்கள், பெரம்பலூர் உடையார் முதலியோர் எல்லாம் கோயிலின் பல பகுதிகளைக் கட்டியிருக்கிறார்கள். இவைகளையெல்லாம் விரிக்கில் பெருகும்.

இவர்கள் மாத்திரம் என்ன, வெள்ளைக்கார கலெக்டர்களும் இப்பழமலை நாதர் கோயில் திருப்பணியிலே பங்கு பெற்றிருக்கிறார்கள். மகம்மதியர்கள் காலத்திலே இக்கோயிலைப் பாதுகாப்புக்கு உரிய கோட்டையாக்கி யிருக்கிறார்கள், 1803-ல் கும்பினி ஜாகீர் கலெக்டராக இருந்த சார்ல்ஸ் ஹைட் என்பவர் கைலாசப் பிரகாரத்துக்குத் தளவரிசை போட்டிருக்கிறார். தேர் இழுக்க இரும்புச் சங்கிலி, கும்பஹாரத்துக்கு வெள்ளிக் குடம் எல்லாம் செய்து வைத்திருக்கிறார். நகரத்தார்களும் இந்தக் கோயில் திருப்பணியில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.

இக்கட்டுரையைச் சுந்தரர் தலையிலே பழியைப் போட்டு ஆரம்பித்தோம். அந்த வரலாறு உண்மையல்ல என்றும் கண்டோம். ஆனால் இந்தச் சுந்தரர் இங்கு உண்மையிலேயே செய்த காரியம் ஒரு ரஸமான வரலாறு. சுந்தரருக்கு எப்போதுமே பணமுடை. எந்தக் கோயிலுக்குச் சென்றாலும், எங்கெல்லாம் இறைவனைக் கண்டாலும்

வே.மு.கு.வ -6