பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9

தில்லைச் சிற்றம்பலவன்

மேனாட்டில் நடனப் பிரசித்திப் பெற்ற ரஷ்ய நாட்டு மாடம் பாவ்லோவா ஒரு நாள் தன் நடனங்களை ஒரு பெரிய அரங்கிலே ஆடிக்காண்பிக்கிறாள். நடனங்களைக் கண்டு களித்த ரசிகர் ஒருவருக்கு, கடைசியாக அந்த அம்மையார் ஆடிய நடனத்தின் பொருள் விளங்கவில்லை . ஆதலால் நடனம் முடிந்து திரையிடப் பெற்றதும் அவசரம் அவசரமாக, அந்த ரசிகர் கிரீன் ரூமுக்குள்ளேயே ஓடி அம்மையாரைக் கண்டு மிக்க ஆர்வத்தோடு கேட்கிறார்: 'அம்மையே! தாங்கள் நடன நிகழ்ச்சியில் கடைசியாக ஒரு அற்புதமான நடனம் ஆடினீர்களே அந்த நடனத்தின் பொருள் என்ன?' என்று. மாடம் பாவ்லோவா சிரித்துக் கொண்டு, 'அவ்வளவு எளிதாக அந்த நடனத்தின் பொருளைச் சொல்லக்கூடும் என்றால் அதை நான் நடனம் ஆடிக் காட்டியிருக்கவேண்டாமே' என்கிறாள். உண்மைதான். வெறும் வார்த்தைகளிலே நடனத்தின் பொருளை எல்லாம் சொல்லி விடக்கூடும் என்றால், அதை நடனம் ஆடிக் காண்பிப்பானேன்? அரங்கம், திரைச்சீலை, பக்க வாத்தியம், உடை, அணி என்றெல்லாம் சிரமப்பட்டு தேடுவானேன்! சொல்லால் விளக்க முடியாததை எல்லாம் நடனம் ஆடித்தான் காட்ட முடியும் என்பதே பாவ்லோவாவின் சித்தாந்தம். இந்தச் சித்தாந்தத்தை எத்தனையோ கற்பகோடி காலங்களுக்கு முன்னால் உலக மக்களுக்கு விளக்கியவன் நடனராஜன். அந்த