பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

89

ஊர்த்துவ தாண்டவத்தையே ஆடுகிறார். காளி தோல்வியை ஒப்புக் கொள்கிறாள். நிருத்த சபை, நடராஜனது முழு ஆளுகைக்குள் வந்து விடுகிறது. தில்லைக் காளியோ செருக்கடங்கி, ஊருக்கு வடபுறத்தே ஒதுங்கி எல்லைக் காளியாகி விடுகிறாள். இப்படித்தான் சிற்றம்பலத்தான் இந்தத் தில்லையிலே இடம் பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்று கூறும் தல வரலாறு.

தில்லை சிற்றம்பலவன் கோயில் கோபுரம்

இந்தத் தில்லைச் சிற்றம்பலமுடையான் கோயில் மிகப் பெரிய கோயில். 'கோயில்' என்றாலே வைணவர்களுக்கு ஸ்ரீரங்கம், சைவர்களுக்கு இந்தச் சிதம்பரம் என்று ஆகிவிட்டது தமிழ் நாட்டில், இக் கோயிலின் விஸ்தீரணம் நாற்பது ஏக்கர் பூமி. நான்கு நான்கு வாயிலிலும் நான்கு ராஜ கோபுரங்கள், இந்தக் கோபுரங்களை இணைத்து நல்ல கருங்கல் மதில்கள். கீழ்க் கோபுரம் கி.பி. 1250-ல் மதுரையிலிருந்து அரசாண்ட சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது என்றும் பின்னர் பச்சையப்ப முதலியாரால் செப்பனிடப்பட்டது என்றும் கூறுவர். வடக்கு கோபுரம் பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விஜயநகர மன்னனாக இருந்த கிருஷ்ண தேவராயனால் அவனது ஒரிஸ்ஸா வெற்றியின் நினைவாகக் -