பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

வேங்கடம் முதல் குமரி வரை

கண்ட பின்தான், அன்பு பிறந்திருக்கிறது, அவர்கள் உள்ளத்தில்.

உலகின் நன்மைக் கெல்லாம் காரணமாக இருக்கும் ஆதவன், அவன் ஒளியிலே பங்கு பெற்று, அவன் வெம்மையைக் குறைத்து, தண்மையையே அளிக்கும் இந்திரன், இரண்டுக்கும் அடுத்தபடியாக ஆக்கவும் அழிக்கவும் உதவும் அனல், இவற்றையே கொடி நிலை கந்தழி வள்ளி என்றெல்லாம் பெயரிட்டு வணங்கியிருக்கிறார்கள்.

இப்படி உருவான இறை உணர்ச்சியிலேயும் ஒரு குறை என்றுமே இருந்து வந்திருக்கிறது. உண்ணத் தெரிந்ததோடு, உடுக்கத் தெரிந்ததோடு, வாழ்வு பூரணமாகவில்லை என்பதை உணரத் தொடங்கி யிருக்கிறார்கள். அப்போது அவர்கள் நீண்டுயர்ந்த மலையைக் கண்டு, அங்குச் செடிகளில் மலரும் மலர்களைக் கண்டு, அந்த மலர்களில் எழும் மனத்தினை முகர்ந்து இன்பம் பெற்றிருக்கிறார்கள். அப்படியே அகன்று பரந்த கடலிலே, அந்தக் கடல் அலைகளின் ஒலியிலே, அந்த ஒலி எழுப்பும் இன்னிசையிலே உள்ளம் பறி கொடுத்திருக்கிறார்கள். அஞ்சி வழிபட்ட உள்ளத்திலே அன்பு கலந்த இன்பம் பிறந்திருக்கிறது. இந்த இன்பத்தை உருவாக்க அழகுணர்ச்சி தோன்றியிருக்கிறது.

அப்படித்தான் மலை மூலமாக, அலை மூலமாக, கலை மூலமாக இறைவழிபாடு ஆரம்பித்து வளர்ந்திருக்கிறது. அந்த மலையையும், அலையையும், கலையையும் உருவகப்படுத்தியே மலைமகள், அலைமகள், கலைமகள் என்று கற்பனை பண்ணி இருக்கிறார்கள். நின்று தொழுதிருக்கிறார்கள். விழுந்து வணங்கியிருக்கிறார்கள்.

இடையிடையே பழைய பயமும் விட்டபாடாக இல்லை. அந்தப் பயத்தை யெல்லாம் எண்ணியபோது கலைமகள், அலைமகள், மலைமகள் மூன்று பேரையும் சேர்த்தே கினைத்திருக்கிறார்கள். அந்த மூன்று உருவமும் சேர்த்தே