பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

111

எண்ணரும் பெருவரங்கள் முன் பெற்று
அங்கு எம்பிராட்டி தம்பிரான் மகிழ்ந்தருள,
மண்ணில்மேல் வழிபாடு செய்தருளி
மனையறம் பெருக்கும் கருணையினால்,
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்கு நாடு
காதலின் நீடிய வாழ்க்கை
புண்ணியத் திருக்காமக் கோட்டத்துப் பொலிய
முப்பதொடு இரண்டு அறம் பெருக்கும்

அவளது பான்மை பாராட்டப் படுகிறது.

இந்த அறம் வளர்த்தாள் மாமரத்தடியில் மணலினால் லிங்கம் அமைத்துப் பூஜை செய்து வரும்பொழுதுதான், இறைவன் அவளது தவத்தைக் கண்டு மகிழ்ந்து, அந்த மாவடியில் காட்சி தந்து ஆட்கொள்கிறார் என்று புராணங்கள் கூறும். இவளை நினைந்தே, 'அருட்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவள் காண்’ என்று இறைவனைப் பாடி மகிழ்கிறார், அப்பர்.

கர்ப்பகிருஹத்தை அடுத்த அந்தராளத்திலே அவளே ஸ்ரீ சக்கரமாகவும் விளங்குகிறாள். சாதாரணமாக, சக்கர ஸ்தாபனம் செய்து, அதன் பேரிலேயே மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்வதே வழக்கம். இங்கு மாத்திரம் சக்கர பீடம் மூல விக்கிரஹத்துக்கு முன்னாலே தனியே இருக்கிறது. வட்ட வடிவமாக அம்பிகையின் எதிரிலே ஒரு தொட்டி போன்றிருக்கும் இடமே அச் சக்கர பீடம். அஷ்ட லக்ஷ்மியையும் அந்தப் பீடத்திலே உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் பீடத்தையே ஆதிசங்கரர் பூஜித்துப் பேறுகள் பெற்றார் என்றும், அதனாலேயே காஞ்சிகாமகோடி பீடாதிபதி என்று ஆச்சார்ய சுவாமிகள் அழைக்கப்படுகின்றனர் என்றும் சொல்கிறார்கள். மூலத் திரு உருவை விட, அம்பிகை தோன்றிய பிலாகாசமும், ஸ்ரீப சக்கரமாக அமைந்த இந்தப்