பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

வேங்கடம் முதல் குமரி வரை

பீடமும் நிறைந்த சாந்நித்யம் உடையவை என்பது மக்கள் நம்பிக்கை.

இந்தக் காமாக்ஷியைச் சுற்றித்தான் எத்தனை எத்தனை அம்பிகைகள். அருபலக்ஷ்மி எனப்படும் அஞ்சன காமாக்ஷி இடப்புறத்தில் வடக்கு நோக்கித் தவம் புரிகிறாள். மகா லசக்ஷ்மிக்குத் தான் மிகவும் அழகுடையவள் என்ற கர்வம், அதனால் ஒரு நாள் தன்நாயகன் மகாவிஷ்ணுவின் அழகையே பரிகசிக்கிறாள். அதனால் அவர் சாபமிடுகிறார். அந்தச் சாபம் நீங்கக் காம கோட்டத்தை அடைந்து தேவியை நோக்கித்தவம் புரிகிறாள். காமாக்ஷியின் குங்கும நிர்மால்ய பிரசாத ஸ்பரிசத்தால் தன் சுயரூபம் பெறுகிறாள் என்பது கதை.

ஆம்! வலப்பக்கத்தில் இப்படிச் செய்த தவத்தால் பூரண அழகை மீண்டும் பெற்ற செளந்தர்ய லக்ஷ்மியும், அவள் சௌந்தர்யம் பெற்றதைக் கண்டு, அவளைத் திரும்பவும் தன்னுடனேயே அழைத்துச் செல்ல ஆவலோடு ஓடி வந்திருக்கும் கள்ளப் பெருமானுமே இருக்கிறார்கள், நல்ல சிலை உருவிலே (கணவனது அழகை எள்ளி நகையாடும் நங்கையர்களுக்கு எல்லாம் இந்த அரூப லக்ஷ்மியின் கதை ஓர் எச்சரிக்கையே).

இன்னும் வராஹீ அர்த்தநாரி, அன்னபூரணி, ராஜசியாமளா என்னும் அஷ்ட புஜங்களோடு கூடிய சரஸ்வதி எல்லோருமே இந்தக் காமாக்ஷியின் கோயிலுக்கு வந்து சேர்ந்துவிடுகிறார்கள். அன்னை பராசக்தியின் அம்சம் அத்தனையையும் ஒருங்கே காண இந்தக் கோயில் ஒன்றே போதும். மூல மூர்த்தியாம் காமாக்ஷியைப் பற்றியும், அவளைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றியும் ஒரு வார்த்தை.

இன்று உற்சவ மூர்த்தியாக இருப்பவள் சமீப காலத்தில் உருவானவளே. புராதனமான உற்சவ மூர்த்தி தனித் தங்கத்தால் ஆனவள். ஆகவே பங்காரு காமாக்ஷி என்று பெயர் பெற்றிருந்தாள். அந்தச்சொர்ண காமாக்ஷியை மைசூரிலிருந்து