பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

113

ஆண்ட ஹைதர்அலி கைப்பற்றிச் செல்ல முயன்றிருக்கிறான். இதைத் தடுக்கத் தஞ்சையிலிருந்த நாயக்க மன்னர்கள் இந்தப் பங்காரு காமாக்ஷியைத் தஞ்சைக்கே பத்திரமாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு இன்னும் கோயில் கொண்டிருக்கிறாள், இந்த அழகானதங்கக் காமாக்ஷி-புனுகுச் சட்டத்துக்குள் புதைந்து கொண்டு.

இந்தக் காமாக்ஷியின் பிரதிநிதியாகக் காமகோடி பீடம் சங்கராச்சாரிய சுவாமிகள் 1941ஆம் வருஷம் பங்காரு காமாக்ஷியின் பாதங்களை மட்டும் உருவாக்கிப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். ஆம். 'பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ?' என்று கற்பனை பண்ணத் தெரிந்தவன்தானே தமிழன்.

இதுவரை சொன்ன மூர்த்தங்களைத் தவிர, இக் கோயிலில் ருத்ரமூர்த்தியான துர்வாஸர் இருக்கிறார். உத்ஸவமூர்த்தியின் எதிரில் உள்ள மௌன மண்டபத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்டதுண்டீரராஜர் கூப்பிய கையுடன்நின்று கொண்டிருக்கிறார். காசி கால பைரவர், மஹிஷமர்த்தனி, அகஸ்தியர், ஹயக்கிரீவர் முதலிய விக்கிரகங்களும் இக்கோயிலில் உண்டு.

கோயிலுக்கு வடமேற்கே உலகாணிதீர்த்தம் என்னும் பஞ்ச கங்கைக் குளம் இருக்கிறது. அக்குளக்கரையிலே மூன்று நிலைகள் உள்ள மாடம், அந்த மாடங்களில் நின்றான், இருந்தான், கிடந்தான் கோலங்களில் விஷ்ணு சேவை சாதிக்கிறார். இச்சிற்ப வடிவங்கள் எல்லாம் சிமெண்டால் சமீப காலத்தில் உருவானவை.

பராசக்தியாம் காமாக்ஷி கோயிலிலே இவர்களுக்கு இடம் கொடுப்பானேன் என்று கேட்கலாம் நீங்கள். காமாக்ஷி அம்மை அறம் வளர்க்கப் புறப்பட்டதை நாம் அறிவோம். அதற்கென்று வந்த பண்டங்களை அப்புறப்படுத்தியும்,

வே-கு : 8