பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

119

மற்றொரு சாரர். யானை போன்ற உயர்ந்த கட்டு மலையிலே பெருமாள் எழுந்தருளியிருப்பது என்னவோ உண்மை. மலை மேல் நிற்கும் இம்மாதவனைப் பூதத்தாழ்வார்,

அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணிமணியின்
துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான் - முத்தீ
மறையாவான் மாகடல் நஞ்சுஉண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான்!

என்று பாடி மகிழ்கிறார்.

இந்த அத்தியூரான் கோயில் 1200 அடி நீளமும் 800 அடி

பல்லவர் தூண்கள்

அகலமும் உடைய பெரிய மதில் சூழ்ந்த கோயிலாக இருக்கிறது. இவனைக் காண மேலக் கோபுரம் வழியாகத் தான் நுழைய வேண்டும். பரந்த மைதானத்தைக் கடந்தால், நல்ல உயரமான தூண்களும் அழகான கோபுரமும் உடைய நாலு கால் மண்டபத்தைக் காண்போம்.

இதன் பின் கோபுரத்தோடு கூடிய மகா மரியாதை வாயிலையும் கடந்தால், திரு மஞ்சன மண்டபத்துக்கு வந்து சேருவோம்.

இனி வட பக்கம் திரும்பிப் பன்னிரண்டு படிக்கட்டுகளில் ஏறினால் ஒரு மகா மண்டபத்தை அடைவோம். அந்த மகா