பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

வேங்கடம் முதல் குமரி வரை

மண்டபத்தையும் அதற்கு மேற்கேயுள்ள முகமண்டபத்தையும் கடந்தால், பெருந்தேவித் தாயார் சந்நிதி வந்து சேருவோம்.

பெருந்தேவி உண்மையிலேயே பெரிய இடத்துத் தேவி என்பதை அவள் உடுத்தியிருக்கும் ஆடையும் அணிந்திருக்கும் நகைகளுமே சொல்லும். நிரம்பச் சொல்வானேன்? ஒரே வைர மயம். உச்சிமுதல் உள்ளங்கால்வரை அப்படியே வைத்து அழுத்தி யிருக்கிறார்கள். கற்சிலையாகவும் செப்பு சிலையாகவும் இருக்கிறாள் அவள் என்பர். என்றாலும் அவளது திருமுக மண்டலத்தைத் தவிர, மற்றவை எல்லாம் நவரத்தினமயமாகவே தோன்றும்.

வரதர் கோயில்

இவளை வணங்கி அருள் பெற்றபின், திரும்பவும் படிகள் இறங்க வேண்டும், கருடாழ்வார் சந்நிதிப் படி கடக்க வேண்டும். கருடாழ்வாரை எதிர் நோக்கி

இருப்பவர் குகா நரசிம்மர். இவர் ஒரு சிறு குகைக்குள்ளேயே இருக்கிறார். இவரைத் தான் 'மன்று மதில் கச்சிவேளுக்கை ஆளரி' என்று திருமங்கை மன்னர் பாடியிருக்கிறார். இவரே இக்கோயிலில் முதல் முதல் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது புராண வரலாறு.

இந்தக் குகை நரசிம்மரை வலம் வந்து கீழ்ப்பிராகாரத்துக்கு வந்து சில படிகள் ஏறினால் ஒரு சிறு மண்டபம் வரும். அதன்