பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

வேங்கடம் முதல் குமரி வரை

நேரத்தில் மண்டபம் இடிந்து விழுமோ என்று. ஆதலால் விரைவிலேயே தொழுது திரும்பி விட வேண்டும்.

திரும்பித் தென்பக்கம் வந்தால், மேற்கே நோக்கிய தலை வாயிலும், கிழக்கு நோக்கிய சந்நிதியும் உடையவராய் உமாபதி ஈசுவரர் இருப்பார். கர்ப்ப கிருஹத்தின் வாயிலில் நிற்கும் துவார பாலகரே மிக்க ஸ்டைலாக நிற்பர். இறைவனை வணங்கிவிட்டுக் கர்ப்ப கிருஹத்தை ஒரு சுற்றுச் சுற்றினால், நான்கு அழகான கோஷ்ட விக்கிரங்களைப் பார்க்கலாம்.

நல்ல அழகான வடிவங்களாக மாத்திரம் அல்ல, புதிய கோணங்களிலே அமைந்த கோலங்கள் அவை. சாதாரணமாக, தக்ஷிணாமூர்த்தி கால் மேல் கால் போட்டு, யோக நிலையில் இருப்பதைத்தான் மற்றக் கோயில்களில் பார்த்திருப்போம். இங்குள்ள தக்ஷிணா மூர்த்தியோ ஒரு காலைத் தொங்கவிட்டு, மற்றொரு காலைப் பீடத்தில் ஏற்றி வைத்துத் தலை சாய்த்த கோலத்தில் இருக்கிறார்.

உத்கடி ஆசனத்தில் அவர் தலை சாய்த்துக் கையை உயர்த்தி இருக்கும் நிலையைப் பார்த்தால், ஆசிரியத் தொழிலுக்கு ஏற்றவரே என்று தோன்றும். சிஷ்யர்களைப் பார்த்து, 'அட பயல்களா! நான் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டியதைப் புரிந்து கொண்டீர்களா?' என்று கேட்பது போலவே இருக்கும். கையில் பிரம்பு இல்லாத