பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

141

யாரும் அவர் பாடிய மூத்த திருப்பதிகம் இரட்டை மணி மாலை அற்புதத் திருவந்தாதி பாடல்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வருமே.

புனிதவதியான காரைக்கால் அம்மை தன் கணவனை விட்டுப் பிரிந்து, இந்த ஊனுடை வனப்பையெல்லாம் உதறித் தள்ளிப் பேய் உரு எய்திக் கைலாசகிரியிலே இருந்து தலையாலேயே நடந்து வந்து நடராஜனது திருவடிக்கீழ் என்றும் சிவானந்தத்தை அனுபவித்து கொண்டிருக்கிறாள் என்று வேறே படித்திருக்கிறோம். அதோடு இறவாத இன்ப அன்பு வேண்டிய அவர், பின்னும், 'பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும். இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அரவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க!' என்றெல்லாம் வேண்டிக் கொண்டவர் ஆயிற்றே. அவரைக் காணவில்லையே என்று உள்ளம் ஏங்கும்.

இத்தனை விஷயங்களைத் தெரிந்த நாம், 'எங்கே அந்தக் காரைக்கால் அம்மை?, என்று கேட்டால், கோயில் நிர்வாகிகள், 'ஓ! அவரையா கேட்கிறீர்கள்?' என்று சொல்லி ரத்ன சபைக்குத் தெற்கே இரும்புக் கிராதிகளுக்குள் அடைத்து வைத்திருக்கும் மண்டபத்துக்கு அழைத்துப் போவார்கள் நம்மை. அங்கு