பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

வேங்கடம் முதல் குமரி வரை

சென்றால், மற்றச் செப்புச் சிலைகளோடு செப்புச்சிலையாய்க் காரைக்கால் அம்மையையும் பேயுருவத்திலேயே காண்போம், கொங்கை திரங்கி, நரம்பு எழுந்து, குண்டுக் கண்களும், வெண்பற்களும், குழி வயிறும் உடைய பேயுருத்தான் என்றாலும், அந்த அம்மையின் புனிதமாக உள்ளமும் அன்பும் நம்மை அடிமை கொள்ளும்.

இனி, கோயிலை விட்டு வெளியே வரலாம். தேவாரம் பாடிய மூவரும் பேறும் பழையனூர், ஆலங்காடு இந்த ஆலங்காடுதானே என்று கேட்டால், இந்தக் கோயிலுக்கு வெளியே ஊருக்கு வட மேற்கேயுள்ள நீலி கோயிலைக் காட்டுவர் மக்கள். இந்தப் பழையனூர் நீலிவரலாறு இலக்கியப் பிரசித்தி உடையதாயிற்றே. அதைத் தெரிந்து கொள்ளாமல் திரும்ப முடியுமா நம்மால்?

கதை இதுதான். காஞ்சியில் சுதரிசனச் செட்டி என்ற ஒரு வணிகன், அவனுக்கு மனைவியர் இருவர், இளையாள் மோகத்தால் மூத்தாள் நீலியை வஞ்சனையால் சொல்கிறான் அவன். அவளோ இந்த ஆலங்காட்டில் பேயாய் அலைகிறாள்.

வணிகன் ஒரு நாள் இந்த ஆலங்காட்டு வழியே தனியே வருகிறான். பேயாக இருந்த நீலி பெண் வடிவில் வணிகனைத் தொடர்கிறாள். அவள் வஞ்ச மொழிகளுக்குச் செவிகொடாது செல்கிறான் வணிகன்.

பின்னும் தொடர்வது! அறிந்து, பழையனூர் அம்பலத்து வேளாளரிடம் முறையிடுகிறான், பேயாம் நீலியும், அவள் தன் கணவனுடன் வாழ வழி செய்ய வேண்டுகிறாள். பேயின் இடையில் இருந்த குழந்தையும் வணிகனைத் தந்தை உறவுடன் அணைகிறது.

இதனால் ஏமாந்த வேளாளர் எழுபதின்மரும் வணிகனை அப் பெண் பேயுடன் ஓர் இரவு தங்கள் ஊரில் தங்கச்