பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16. நின்ற ஊர்ப் பூசல் அன்பன்

செயற்கரிய செய்த திருத்தொண்டர் அறுபத்து மூவர் வரலாற்றைச் சேக்கிழார் பெரிய புராணமாகவே பாடியிருக்கிறார். அந்த அறுபத்து மூவரில் ஒருவர் பூசலார் நாயனார். அவர் வாழ்ந்த ஊர் திருநின்ற ஊர். காஞ்சீபுரத்துக்கு வடகிழக்கே இருபது மைல் தொலைவில் இருக்கிறது.

காஞ்சியில் இருந்து அரசு செய்தவர்களில் பேரும் புகழும் பெற்றவன் ராஜசிம்மன் என்னும் பல்லவமன்னன். அவனுக்கு ஓர் ஆசை. தன்னுடைய ஆட்சிக் காலத்திலேயே கைலாச நாதருக்கு ஒரு கோயில் கட்டி முடிக்க வேண்டும் என்று அளவற்ற செல்வம் படைத்த அவன் நினைக்கிறான். அவன் ராஜ்யத்தில் வாழும் மக்கள் எல்லாம் துணை புரிகிறார்கள். கோயில் உருவாவதற்குக் கேட்பானேன்?

இப்படிக் கைலாசநாதருக்கு ராஜசிம்மன் கோயில் கட்ட முனைந்திருப்பதை அறிகிறார், பூசலார். இவருக்கும் ஆசை பிறக்கிறது, தாமும் ஒரு கோயில் கட்ட வேண்டுமென்று. இவரோ பரம ஏழை. தொண்டு கிழம். அன்றாட வாழ்க்கையே மிகவும் சிரமம். இவர் எப்படிக் கோயில் கட்டுவது?

அவருக்கு ஒன்று தோன்றியது. ஏன் தம்முடைய உள்ளத்துக்குள்ளேயே ஒரு கோயில் கட்டக் கூடாதென்று, எண்ணிய எண்ணத்தை நிறைவேற்ற முயல்கிறார், இந்தப் பூசலாரும். ராஜசிம்மன் கோயில் கட்டக் கால்கோள் செய்த அன்றே, இவரும் தன் மனத்துள் கட்டும் கோயிலுக்குக் கால்கோள் நடத்துகிறார்.

மன்னன் ஏவலால் பொன்னும் பொருளும் வந்து குவிகின்றன. சிற்பிகள் வேலையைத் துவக்குகின்றனர். மதில் எழுகிறது. மகா மண்டபம் உருவாகிறது. அர்த்த மண்டபம் கட்டப்படுகிறது. கர்ப்ப கிருஹம் நிர்மாணம் ஆகிறது. அதன்