பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

பேரில் விமானம் எழுகிறது. இரண்டு வருஷ காலமாகக் கோயில் கட்டும் வேலை ஜரூராக நடக்கிறது, கச்சியிலே.

பூசலார்

பூசலாரும் சளைக்கவில்லை . இவரது கோயிலிலும் மதில், மண்டபம், கர்ப்பகிருஹம், விமானம் எல்லாம் உருவாகின்றன- யாதொரு செலவும் இல்லாமலேயே.

ராஜசிம்மன் கோயில் கட்டி முடிந்ததும் கைலாசநாதரைப் பிரதிஷ்டை செய்ய நாள் குறிக்கிறான். அதே நாள் அதே முகூர்த்தத்தையே பூசலார் தாம் கட்டிய கோயிலிலும் இறைவன் பிரதிஷ்டைக்குக் குறித்துக் கொள்கிறார்.

பிரதிஷ்டை நடக்க இருப்பதற்கு முந்திய நாள் இரவு, மன்னன் ஏற்பாடுகளையெல்லாம் கவனித்து விட்டுத் தன் அரண்மனை திரும்புகிறான். அரிய காரியம் ஒன்றைச் சிறப்பாகச் செய்து முடித்த நிறைவோடு அமளி சேர்கிறான்.

இரவு நடுச்சாமம். அரசனது கனவில் கைலாசநாதர் தோன்றுகிறார். மன்னனைப் பார்த்து, 'ராஜசிம்மா! நாளை உதயத்தில்தானே பிரதிஷ்டை? அந்தப் பிரதிஷ்டைக்கு நான் வரமுடியாது போல் இருக்கிறதே. இன்னொரு கோயிலில், ஆம்! நீ கட்டிய கோயிலை விடப் பெரியதொரு கோயிலில் அதே நேரத்தில் பிரதிஷ்டை என்று ஏற்பட்டிருக்கிறதே. நான்

வே-கு:10