பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

155

திருமுல்லைவாயில் கோபுரம்

வழியிலே ஒரு முல்லைவனம். அங்கே ஒரு கொடி மன்னன் ஏறிச் செல்லும் யானையின் கால்களைச் சுற்றிக் கொள்கிறது. அதனால் யானை நடக்க இயலாதது கண்டு, யானை மீதிருந்த சக்கரவர்த்தி உடைவாளால் அக் கொடியை வெட்டி எறிகிறான். இப்படி அவன் வீசிய வாள்வெட்டு முல்லைக் கொடியின் கீழ் இருந்த சிவலிங்கத்தின் மீது படுகிறது.

லிங்கத் திருவுருவின் தலையிலிருந்து ரத்தம் சிந்துகிறது. மன்னன் இதனைக் கண்டு, யானை யினின்றும் இறங்கித் தான் செய்த அபசாரத்துக்கு வருந்துகிறான்.

உடனே இறைவனும் தொண்டைமானை ஆட்கொள்ளக் கருதி, அவனுக்குத் தரிசனம் தருகிறான். அவன் மேற்கொண்ட படையெடுப்பில் தக்க துணையாக இருக்க நந்திதேவனையே உடன் அனுப்பிவைக்கிறான். மன்னனும், குறும்பரை வென்ற பின் தன்னை ஆட்கொண்ட இறைவனுக்கு ஒரு கோயில் கட்டுகிறான். தான் வெற்றி கொண்ட புழற்கோட்டத்திலிருந்து இரண்டு எருக்கந் தூண்கள் கொண்டு வந்து நிறுத்தி விதானம் அமைக்கிறான்.

இப்படித் தான்தோன்றி ஈசராக அமைந்தவரே மாசில்லா மணிநாதர். இவர் கோயில் கொண்டிருக்கும் இடமே வடதிரு