பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

163

பெறுவோம், அங்குள்ள அர்ச்சகரிடம். உங்களுக்குத் தெரியாதா? இங்கு மாசி மகத்தில் நடக்கும் மகிழடி சேவையைப் பற்றி என்று விவரிப்பார். அங்கு விவரிக்கும் சரிதத்தின் முழு விவரமும் தெரிவிக்கப் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் விரைந்து வருவார்.

வன் தொண்டராம் சுந்தரரை இறைவன் திருவெண்ணெய் நல்லூரிலே தடுத்து ஆட்கொள்கிறார். அதன் பின் அவர் திருவாரூர் சென்று, அங்குள்ள பரவையாரை மனக்கிறார். பின்னர் பல தலங்கள் சென்று இறைவனைப் பாடி வணங்கி விட்டுத் திரு ஒற்றியூர் வருகிறார்.

அங்கு இவருக்காகவே பிறந்து வளர்கிறாள், ஒரு பெண், சங்கிலி என்ற பெயரோடு. கோயிலில் அவளைக் கண்டு காதலிக்கிறார் சுந்தரர். இவர் அப்படி ஒன்றும் பிரமாத ஏக பத்தினி விரதர் அல்ல. இது அவரது திரிபாத மூர்த்தி தோழராம் இறைவனுக்குமே தெரியும். ஆதலால், தம் தோழராம் ஆதிமூர்த்தியின் அருளை நாடுகிறார். சங்கிலியை மணக்க.

அவரும் சங்கிலியிடம் சென்று, ‘சால என்பால் அன்புடையவனான சுந்தரன் உன்னை இரக்கின்றான். நீ அவனை மணந்தால் அணைவாய் மகிழ்ந்து’ என்கிறார்.