பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

வேங்கடம் முதல் குமரி வரை

புஷ்கரணி

இந்தக் கோயிலுக்குள்ளே ராமன் எப்படிக் குடிபுகுந்தான் என்பதற்கும் ஒரு வரலாறு உண்டு. கீசிபதர் என்னும் முனிவர் பாண்டாரம் என்னும் மலையில் தவம் பரிகிறார். அவர் தவத்தைக் கலைக்க ஹேலை என்னும் அப்ஸரஸ் வருகிறாள். (பெரிய முனிவர் தவத்தை ஒரு சிறிய மீன் கலைத்தது என்றில்லையே! போகட்டும், அந்த மட்டும்.) -

முனிவர் தவம் கலைகிறது. ஆண்மகவு பிறக்கிறது. அந்த ஆண் மகவை விட்டு விட்டுப் பிரிந்து விடுகின்றனர், முனிவரும், தேவகன்னிகையும். குழந்தை மரத்திலிருந்து சொட்டிய தேனை உண்டே வளர்கிறது. மதுமான்' என்றே பெயர் பெறுகிறது.

இந்த மதுமானுக்குத் தரிசனம் தரவே, அன்று மாயமானை வேட்டுச் சென்ற ராமன் இங்கு எழுந்தருளியிருக்கிறான் - அனுமனோடு சீதா லஷ்மண பரத சத்துருக்கன் சமேதனாக.

இத்தனை பேர்கள் இங்கு வந்திருக்கும் போது, அந்தக் கருட வாகனர் கஜேந்திர வரதராஜனைச் சும்மா இருக்க விடுவார்களா? ஸப்த சோமா என்ற மகரிஷி அவரை வரவழைக்கிறார் இங்கே அவருக்கும் ஒரு தனிச் சந்நிதி. இவ்விதமே மந்நாதன் நரசிம்மர் ராமர் வரதர் எல்லோருமே வந்து சேர்ந்திருக்கிறார்கள், இந்தக் கோயிலுக்கு. இவர்களைத்