பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

175

தவிர, ஆண்டாள் அனுமன் ஆழ்வார்களுக்கு எல்லாம் தனித் தனிச் சந்நிதிகள் உண்டு.

ஆண்டாள் சந்நிதிப் பக்கத்திலிருந்து பார்த்தசாரதியின் கர்ப்ப கிருஹத்தின் மேல் உள்ள விமான சேவை செய்து விட்டுப் பார்த்தசாரதியைத் தரிசிக்க விரையலாம். மூலத் தானத்தில் கம்பீரமாக முறுக்கிய மீசையோடு நீண்டுயர்ந்த தோற்றத்தில் காட்சி அளிப்பவனே வேங்கட கிருஷ்ணன். கர்ப்ப கிருவரத்தில் நிற்கும் மூல மூர்த்தியை வேங்கடகிருஷ்ணன் என்றும், உற்சல மூர்த்தியைப் பார்த்தசாரதி என்றும் அழைக்கிறார்கள்.

திருமலை மேல் நிற்கும் அம்மாதவனைக் கண்டு தொழச் சென்ற சுமதி என்ற தொண்டைமான் சக்கரவர்த்தி உள்ளத்தில் ஓர் ஆசை. 'உன்னை எத்தனையோ கோலங்களில் எல்லாம் காண்கிறேனே, அன்று பார்த்தனுக்குச் சாரதியாய்த் தேர் ஊர்ந்தபோது, எந்தக் கோலத்தில் இருந்திருப்பாய் என்று நான் காண வேண்டாமா?' என்று மிக்க ஆதங்கத்தோடேயே பிரார்த்தித்துக் கொள்கிறான்.

அவனுடைய பிரார்த்தனைக்கு இரங்கிப் பிருந்தாரண்ய க்ஷேத்திரமான இந்தத் திரு அல்லிக்கேணியிலே திருவேங்கட முடையானே, பார்த்தசாரதியின் கோலத்தில் எழுந்தருளுகிள்றான் என்பது கதை. பார்த்தசாரதி தனியே வரவில்லை அண்ணன் பலராமன் தம்பி சாத்தகி மனைவி ருக்மணி மகன் பிரத்தியும்நன் பேரன் அநிருத்தன் - சமேதனாக குடும்பத்தோடேயே இங்கு வந்திருக்கிறான்.

பார்த்தனுக்குத் தேரோட்டியாய் எழுந்த அவசரம் ஆனதால் சக்கர ஆயுதம் இல்லை. இடது கையில் வலது கையில் சங்கு உண்டு. ஆம். வெற்றியை ஊதி அறிவிக்கச் சங்கு அவசியம்தானே. இடது கை வரத முத்திரையோடு இலங்குகிறது. மிக்க அழகோடு ருக்மிணி பக்கத்திலே