பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

179

போதே, ஒரு சிறு மாங்கொட்டையைப் பூமியில் நட்டு, மண்ணைப் போட்டு மூடி, அதன் மேலே ஒரு கூடையைப் போட்டு மூடுவான். 'ஜல் மந்திரக்காளி! சூ மந்திரக்காளி?' என்று மந்திர உச்சாடனம் வேறே செய்வான், பின்னர் கூடையைத் தூக்கிக் தூக்கிக் காட்டுவான். மாங்கொட்டை நட்ட சில நிமிஷ நேரங்களுக்குள்ளே, அது செடியாக வளர்ந்து மரமாக உயர்ந்து பூத்துக் காய்த்துப் பழங்களையும் கொடுக்கிறது. என்ன அற்புதமான வேலை! (இந்த அற்புத வேலை நமது சர்க்காருக்குத் தெரிந்திருந்தால், உணவுப் பிரச்சனையை எவ்வளவு எளிதாகத் தீர்த்து விடலாம். ஆனால் ஒன்றே ஒன்று. மரம் வளர்ந்து பூத்துக் காய்த்தது போலவே, மாய்மாய் மறைந்தும் போய்விடுமே என்ற கவலைதான்).

கழைக் கூத்தாடியின் கடைசி வேலை: தன் சொந்தப் பெண்ணை உட்காரவைத்துக் கூடையால் மூடுவான். பின்னர் கூடடைக்குள் பல தடவைகள் நீண்ட கத்தியால் குத்துவான். நமக்கோ உடல் பதறும். பின்னர் கூடையைத் திறந்தால், அதனுள் பெண்ணிருக்க மாட்டாள். மறைந்து போயிருப்பாள். அதன் பின், 'ஏ பொண்ணு! ஏ கண்ணு!' என்று கூவவான். தெருக் கோடியிலிருந்து ஓடி வருவாள் பெண். இதுதான் அதி அற்புதமான வேலை, கழைக் கூத்தாடியிடத்திலே. இதைக் காட்டி விட்டால் பணம் காசு எல்லாம் நிறையப் பெயரும், அவனுக்கு.

இப்படி நடப்பது கண்கட்டி வித்தை, இதை ஒரு வித்தையாகச் செய்யாமல், வாழ்விலே ஒரு நிகழ்ச்சியாகவே நடத்திக் காட்டினார் ஒருவர். அவர்தான் சைவ சமயக் குரவர்களில் முதல்வர் ஆகிய திருஞானசம்பந்தர். கழைக் கூத்தாடிக்காவது சுடைக்குள் சென்று மறைய, உயிரோடு கூடிய, எலும்புத்தோலும் சதையும் இரத்தமும் உள்ள ஒரு பெண்ணே அவனிடமிருக்கிறது. ஆனால் ஞானசம்பந்தரோ,