பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

131

என்று தொடங்கிப் பதினோரு பாடல் 'தேனமர் பூம்பாவை'ப் பாட்டாகவே பாடுகிறார்.

அவ்வளவதான். குடத்துக் குள்ளிருந்து பூம்பாவை அழகிய கன்னிப் பெண்ணாக வெளியே வருகிறாள். வணங்குகிறாள். உயிர் அற்ற உடலுக்கு உயிர் அளித்தவர் ஆனதால், தனக்கு அவள் மகள் முறை என்று சொல்லி அவளை மணக்க மறுக்கிறார், சம்பந்தர். பூம்பாவையும் கன்னி மாடத்திலிருந்து, சிவத் தியானம் பண்ணி, முத்தி அடைகிறாள்.

சாதாரணமாக எலும்பைப் பெண்ணுருவாக்கிய

மயிலைக் கபாலி கோயில்

இச்செயலைக் "கன்னித் தண்தமிழ்' செய்த காரியம் என்று போற்றிப் புகழ்வர் புலவர், தமிழ் மொழியை விடத் தமிழ்ப் பாடல் செய்த அற்புதமே இது என நினைவு கூர்வார் அருணகிரியார்.

அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்றவரே

ஞானசம்பந்தர் என்பர், அவர் பாடிய திருப்புகழில்.

சமயக் குரவரில் ஒருவர் இப்படி எலும்பைப் பெண்ணுரு வாக்கியிருக்கிறார். இன்னுமொருவர் (சுந்தரர்) முதலையுண்ட பாலனையே அழைத்திருக்கிறார். 'கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே!' என்று சுந்தரர்