பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

வேங்கடம் முதல் குமரி வரை

இறைவனுக்கே உத்தரவு போடுகிறார். ஆனால் சம்பந்தர் இறைவனிடம் விண்ணப்பம் கூடச் செய்து கொள்ளவில்லை. 'கார்த்திகை நாள் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்?' 'தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்?' என்று பூம்பாவையிடமே (எலும்புருவாக இருப்பவளிடத்திலேதான்) கேட்கிறார்.

கபாலீச்சரத்தில் இருக்கும் இறைவன் என்ன அவ்வளவு விதரணை தெரியாதவனா? பூம்பாவை பூத உடலோடே விளக்கீடு காணவும், ஆதிரை நாள் காணவும், தைப்பூசம் காணவும் வகை செய்து, எலும்புக்கே உயிர் கொடுத்து விடுகிறான். உயிர் கொடுத்தவர் கபாலீச்சார்தான் என்றாலும், பேரும் புகழும் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தருக்கே.

இந்தக் கபாலீச்சரம் இருப்பது பிரசித்தி பெற்ற மயிலாப்பூரிலே. மயிலாப்பூர் என்றாலே, அங்குள்ள சாந்தோம் கடற்கரை, குளிர்ந்த தென்னஞ் சோலை யெல்லாம் நம் கண்முன் வரும்.

இந்த 'ஆழிசூழ் மயிலாபுரித் திருநகர்' தொல் புகழ் உடையது. 'மடல் ஆர்ந்த தெங்கின் மயிலை' என்றெல்லாம் பாடிய ஞானசம்பந்தரே, மயிலையையும் கபாலியையும் இணைத்துக் கான் அமர் சோலைக் கபாலீச்சரம், என்று பாடியிருக்கிறார்.

கபாலீச்சரத்தான் கோயில் அழகுக்கு அழகு செய்வது அக்கோயிலுக்கு மேல் புறத்தில் உள்ள தெப்பக் குளம். குளத்தின் நடுவிலே நீராழி மண்டபம். குளத்தின் பகைப்புலத்திலே கோயில் கோபுரம், கண்ணுக்கு இனிய காட்சியாய் இருக்கும். கோபுரமோ ஏழு மாடங்களுடன் இருக்கிறது.

இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் வந்ததே அங்குக் கோயில் கொண்டிருக்கும் கற்பகவல்லி