பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

183

அம்பிகையால்தான். உமை மயிலாக உருவெடுத்துச் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்திருக்கிறாள். அவள் மயிலாக இருந்து தவம் புரிந்தமையால், இக்கோயிலுக்கு மயிலை என்றும் மயிலாப்பூர் என்றும் பெயர்கள் ஏற்பட்டிருக்கின்றன.

இவ் வரலாற்றை விளக்குகின்ற சிற்பவடிவம் ஒன்று கோயில் வடக்குப் பிராகாரத்தில் இன்றும் இருக்கிறது. மயிலாக விளங்கிய அம்மைக்குக் கபாலம் ஏந்திய கையனாய்க் காட்சி கொடுத்து ஆட்கொண்ட மயில் வழிபாடு பெருமான் ஆனதினாலே, கபாலி என்று பெயர் நிலைத்திருக்கிறது, இறைவனுக்கு.

இக்கோயிலின் பெரிய திருவிழா அறுபத்து மூவர் உற்சவம். எல்லாச் சிவன் கோயிலிலும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் இருந்தாலும், இந்தக் கோயில் ஒன்றிலேதான் அவர்கள் எல்லோரையும் சேர்த்து எடுத்துத் திருவீதி உலா நடத்ததுகிறார்கள்.

இந்த அறுபத்து மூவரில் ஒருவரான வாயிலார் நாயனார் அவதரித்த தலமும் இதுவே. இவரும் பூசலார் நாயனார் போலவே 'இறைவனை மனத்தகத்தான்' என்று கொண்டாடியவர். இறைவனைப் பகட்டான பூசை புனஸ்காரங்களால் கொண்டாடுவதை விட, மானசீகமாக