பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

வேங்கடம் முதல் குமரி வரை

சிவனை ஒரு நாள் ஒரு பொழுது நினைந்து வணங்கினால் அமரத்வம் சித்தியாகி விடாதா?' என்று வினவுகிறார்.

வான்மீகர் உள்ளத்திலும் சிவனை வணங்கி முத்தி பெறும் விருப்பம் எழுகிறது.

மார்க்கண்டேயரும், 'சரி, நீர் உலகத்தைச் சுற்றி வாரும். எந்த இடத்திலே 'நான் இங்கு இருக்கிறேன்' என்று அசரீரி எழுகிறதோ, அங்கே தங்கித் தவமியற்றும். சிவபெருமான் காட்சி கொடுப்பார்!' என்கிறார்.

அப்படியே செய்கிறார் வான்மீகி. கடற்கரையை அடுத்த ஒரு சிறிய ஊரிலே சிவபெருமான் வான்மீகருக்குத் தரிசனம் கொடுக்கிறார். வான்மீகர் விரும்பிய மூன்று வரங்களையுமே தருகிறார். வரங்கள் அந்த ஊர் அவர் பெயராலேயே நிலைக்க வேண்டும் என்பது ஒன்று. இறைவர் சடாமகுடத்திலே உள்ள கங்கையின் ஒரு பகுதி அங்கு தங்கவேண்டும் என்பது ஒன்று. மேலும் இறைவன் தன் தாண்டவக் கோலங்களை யெல்லாம் காட்டி அருள வேண்டும் என்பது ஒன்று.

அதனால் ஊர் வான்மியூர் என்று நிலைக்கிறது. இறைவன் மகுடத்தில் இருந்து இழிந்த கங்கை ஜன்ம நாசினி, பாப நாசினி, ஞானதயாநி, மோதயாநி என்று ஐந்து திருக்குளங்களில்