பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

199

முருகனை வலாங்கியிருக்கும் 'திருப்போரூர் சந்நிதி முறை' சிறப்பானது. பிள்ளைத் தமிழ் அலங்காரம் தாலாட்டு திருப்பள்ளி எழுச்சி கட்டியம் என்றெல்லாம் அந்தப் பாடல்கள் விரிந்திருக்கின்றன. 'ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கு இரங்கித்தீது புரியாத தெய்வமே!' என்று போரூர் முருகனைக் கூவி அழைப்பார், ஒரு தரம். பின்னர் -

நோயில் தளராமல் நொந்து மனம் வாடாமல்
பாயில் இடவாமல் பாவியேன் - காயத்தை
ஓர் நொடிக்குள் நீக்கி எனை ஒண்போரூர் ஜயா! நின்
சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து!

என்று அவரிடமே வேண்டுவார். அவர் பாடிய பாடல்களைப் படிப்பவர்கள் பக்திப் பரவசம் அடைவது கண்கூடு. 'குஞ்சரமுகற்கு இளைய கோவே! கொஞ்சி உமை முத்தமிடு பூவே!' என்று அவர் கொஞ்சும் தமிழில் முருகனை வர்ணிப்பதில்தான் எத்தனை அழகு! அவகாசமும் ஆர்வமும் உடையவர்கள் சந்நிதி முறைப் பாடல்களையெல்லாம் பாடிப் பாடி மகிழலாம். பாராயணமே பண்ணலாம்.

நீண்ட புராண வரலாறோ அல்லது பழைய சரித்திரப் பிரசித்தியோ இல்லாத இந்தத் தலத்தை இந்த வரிசையில் சேர்ப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று. இன்று அங்குள்ள